தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை உயர்த்த வேண்டும் – ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதன உயர்வு குறித்து ஜேவிபியினர் இன்று ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வேதன உயர்வு தொடர்பில் தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளதாக இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இன்றைய பொருளாதார நிலையில், எதிர்வரும் பாதீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தொழிலாளர்களின் நிலையுணர்ந்து உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படை வேதன கோரிக்கையை வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1000 இயக்கத்தினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share:

Author: theneeweb