கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

 

கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் பாவனைக்கு உதவாத வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று(05-03-2019)  விசேட அதிரடிப்படையினரால் குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் கழிவு நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் வெடி பொருட்கள்  இருப்பதை அவதானித்த கிராம மக்கள் அக்கராயன் பொலிஸாருக்கு  தகவல் வழங்கியதையடுத்து அக்கராயன் பொலிஸ் அதிகாரிகள் குழு நீதிமன்ற அனுமதியை பெற்று  விசேட அதிரடிப்படையினர் மூலம் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது எல்எம்ஜி ரவைகள் ஒரு தொகுதி, மோட்டார்  எறிகனை ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
Share:

Author: theneeweb