அனைத்திலும் சமத்துவம் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்

கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்திலும் சமத்துவம் எனும் தொணிப்பொருளில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் நடாத்தப்படவுள்ளது.

எதிர்வரும் எட்டாம் திகதி காலை ஒன்பது முப்பது மணிக்கு சர்வதேச பெண்கள் தின ஊர்வலம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் வரும் பெண்கள் தின விழிப்புணர்வு ஊர்திகளுடன் ஊர்வலம் ஆரம்பமாகி டிப்போச் சந்தியை சென்றடையும். பின்னர் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

கலைநிகழ்வுகள், விசேட உரைகள், பெண்கள் தின பிரகடணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினர்.

Share:

Author: theneeweb