பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நிறைவு

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்ட பேரணியை நிறைவு செய்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே அந்த செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அந்த ஒன்றியம் இதனை தெரிவித்துள்ளது.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு கோரி வடமேல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மேலும் சில பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை தடுப்பதற்காக காவல்துறை பெண் படையணி பயன்படுத்தப்பட்டது.

எனினும் அதே போன்று இன்றைய ஆர்ப்பாட்ட பேரணியையும் தடுப்பதற்காக காவல்துறை பெண் படையணி பயன்படுத்தப்பட்ட போதும், மாணவர்கள் அவர்களை தள்ளிவிட்டு முன்சென்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb