மட்டக்களப்பிலும் மனித எச்சங்கள்!! காவல்துறைக்கு எழுந்துள்ள சந்தேகம்

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் 25 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள தனியார் காணியில் இருந்த கிணற்றிலிருந்து மனித எச்சங்கள் நேற்று அடையாளம் காணப்பட்டன.

இது தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கிராம சேவகருக்கும், காவல்துறையினருக்கம் தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, மட்டக்களப்பு நீதவான் ஊடாக குறித்த பகுதிக்கு சென்று மனித எச்சம் அடையாளம் காணப்பட்ட பகுதியை காவல்றையினர் பார்வையிட்டுள்ளனர்.

பின்னர், சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கையிட்டதன் பின்னர், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb