சமூகம்சார்ந்தஅக்கறையைபேசும்முருகபூபதியின் சொல்லத்தவறியகதைகள்

வாசிப்புஅனுபவம்:  

 

நிலாந்திசசிக்குமார்—

 

எழுத்தாளரும்ஊடகவியலாளருமான முருகபூபதி அவர்களின்காலத்தில்தான்நாமும் வாழ்கிறோம்எனஎண்ணும்போது மிகுந்தமகிழ்ச்சியும்பெருமிதமும் கொள்ளும்அதேவேளை,  அவர்எழுதியிருக்கும் சொல்லத்தவறியகதைகள் நூலைவாசிக்கக் கிடைத்தமையையிட்டு பூரிப்புக்கொள்கிறேன். முருகபூபதி அவர்களைப்பற்றிச் சொல்லும் அளவிற்குஎனக்கு வயதும்அநுபவமும் போதாது. இருப்பினும் அவரது சொல்லத்தவறிய கதைகள்நூலினை வாசித்த ஒருவாசகிஎன்ற வகையில் சிறுகருத்துரையை வழங்கலாம்என நினைக்கிறேன்.

மகிழ்பதிப்பகத்தினால்வெளியிடப்பட்டிருக்கும்சொல்லத்தவறியகதைகள்நூலைஒருஆவணத்தொகுப்பாகவேநான்பார்க்கின்றேன்.

பத்திஉருவில்எழுதப்பட்டிருந்தாலும்ஒவ்வொன்றும்வரலாற்றுப்பதிவாகவேஇருக்கின்றன. அவர்ஒருஇலக்கியவாதியாகவும்ஊடகச்செயற்பாட்டாளராகவும்இருப்பதனால், இவ்வெழுத்துக்கள்உண்மைத்தன்மைநிறைந்துவாசிக்கும்ஆர்வத்தைதூண்டுவதுடன், பத்தியின்நகர்வுசுவாரசியத்தையும்ஆவலையும்தூண்டிநிற்கின்றனஎன்றால்மிகையாகாது. அத்துடன்ஒவ்வொருபத்தியிலும்முருகபூபதியின்சமூகஅக்கறையையும்சமூகம்சார்ந்தவிமர்சனத்தையும்காணமுடிகின்றது.

புலம்பெயர்நாடுகளில்எதுசெய்தாலும்குற்றமாகப்பார்க்கப்படும்சூழல் ,ஒருசிறியகாரணம்கூடபெரியகுடும்பப்பிளவுக்குவழிஅமைப்பதைஅடிக்கிறகைதான்அணைக்கும்என்றபத்திசொல்லிநிற்கிறது.

மறைந்தவர்களின்தொலைபேசிஇலக்கங்கள்என்றபத்தியைவாசிக்கையில், என்னிடம்இருந்தஒருடயறிநினைவில்வந்துபோனது . முருகபூபதியின்குறிப்பிட்டபத்தியில்உள்ளஒவ்வொருவரதுதெலைபேசிஇலக்கங்களும்ஒவ்வொருகதைசொல்லும்என்பதைஅருமையாகபதிவுசெய்திருக்கிறார்.

ஊடகத்துறையில்பணிசெய்கையில்சந்தித்தசிக்கல்களையும்அவற்றைஅவர்சமாளிக்கப்பட்டபாட்டினையும்அறிகையில்மிகவும்சிலிர்ப்பாகவும்வியப்பாகவும்இருக்கின்றது.

அச்சுக்கோர்ப்பதில்உள்ளபிரச்சினைகளும்அதுஎத்தகையபாதிப்புகளைஏற்படுத்தும்என்பதையும்சுவாரசியமாகக்கூறிச்செல்கிறார்.

மேலும்ஊடகவியலாளருக்குத்தோன்றும்சந்தேகங்களும்மனவுளைச்சலும்பலகேள்விகளாகவெளிப்பட்டிருப்பதைக்காணக்கூடியதாகஇருந்தது.

அக்கேள்விகள்எக்காலத்திலும்எந்நாட்டிற்கும்பொருந்தக்கூடியதாகஇருப்பதைஎன்னால்உணரக்கூடியதாகஇருந்தது.

பத்துவயதில்ஆடியகரகாட்டம்எனும்பத்தியில்அவரதுஆசிரியர்களின்கண்ணியமும்அவர்கள்பிள்ளைகள்மேல்கொண்டிருந்தநம்பிக்கையும்நெகிழ்ச்சியூட்டுவனவாகஇருந்தன. கலைகலைஎனச்சொன்னாலும்அவற்றில்மறைந்துகிடந்தசாதீயஅரசியலைநாம்புரிந்துகொள்வதில்லை. அதுவேஅனைத்துக்கலைகளையும்அனைவரும்கற்றுத்தேறதடையாகஇருந்ததுஎன்பதையாராலும்மறுக்கமுடியாது.

இப்பத்தியின்முன்பகுதியில்கூறப்பட்டிருக்கும்கரகத்தின்தாற்பரியம்மிகச்சுவாரசியமானஉண்மை.

“கலைஞர்கள்துவண்டுவிடக்கூடாதுபரிசுகள்வெறும்அங்கீகாரம்தான்“என்றுசொல்லும்கரகாட்டக்கலைஞர்சாமிஅவர்களின்கூற்றுமுற்றிலும்உண்மையே. இக்காலக்கலைஞர்கள்உணரவேண்டியதொன்றாகவும்இதனைக்கூறலாம்.

 

கலவரங்களும்கண்துடைப்புகளும்எனும்பத்தியில்இலங்கைக்கலவரங்களைகண்முன்னேபடம்பிடித்துக்காட்டும்அவரின்விபரிப்புகளைஎன்னவென்பது?அருகில்இருந்துபார்த்துஉணர்ந்தமனநிலையைதந்துவிட்டார்.

அதில்அரசியல்சூழ்ச்சிகளைபட்டும்படாமலும்தொட்டும்தொடாமலும்சொல்லிஎமதுமூளைக்குவேலைகொடுக்கிறார். அதேவேளைகலவரங்களினால்பாதிப்புக்குள்ளானதுஇலங்கையின்பொருளாதாரமும்பொதுமக்களுமேஎன்பதுடன், அக்கலவரங்கள்அவசியமற்றதும்அர்த்தமற்றதுமாகும்என்பதையும்அழகாகவும்ஆணித்தரமாகவும்சொல்கிறார்.

 

தமிழ்பேசும்மக்கள்என்பதில்தமிழரும்முஸ்லிம்களும்அடங்கினாலும், ஏதோஒருஉட்பூசல்இருந்துகொண்டேஇருப்பதைஉணரும்சந்தர்ப்பங்கள்நம்வாழ்வில்அதிகம்நடந்துள்ளன. ஆனால்,இலக்கியஉலகில்இனவேறுபாடுஎன்பதுதாக்கத்தைஏற்படுத்தவேஇல்லைஎன்பதுடன், இனமதவேறுபாடுஇல்லாதஒற்றுமையைவளர்ப்பதுஇலக்கியம்என்பதைசிங்களஇலக்கியங்களைதமிழுக்குத்தந்தமுஸ்லிம்சகோதரர்கள்என்றபத்தியின்மூலம்உணரலாம்.

புத்தரின்மதம்போதித்தஅன்பும்புத்தபிக்குகளின்வாழ்க்கைமுறையும்இக்காலகட்டத்தில்பெரியளவில்மாற்றத்தைக்கண்டுள்ளநிலையைக்காண்கின்றோம்.ஆனால், வாய்விட்டுச்சொல்லும்தைரியம்யாருக்குமேஇல்லை. ஊடகத்துறையில்பணியாற்றுபவர்களுக்குஇருக்கும்அந்ததுணிச்சலைஇப்பத்தியில்காணக்கூடியதாகஇருந்தது.

புத்தகங்கள்என்னகுற்றம்செய்தன?என்றபத்தியைவாசிக்கையில்புத்தகங்கள்மேல்காதல்கொண்டஎவருக்குமேகண்களும்மனமும்கலங்கிநிற்கும். வாசிப்புப்பழக்கம்எழுதத்தூண்டக்கூடியதுஎன்பதைஒவ்வொருஎழுத்தாளரும்உணர்ந்தவிடயமே. அதேபோல்புத்தகம்காவி ,புத்தகப்புழு, புத்தகப்பூச்சிஎன்றபட்டங்கள்புத்தகவிரும்பிகளின்கௌரவப்பட்டங்கள்போன்றுபெருமைகொள்ளச்செய்யும்ஒன்று. அதைநூலாசிரியரும்அனுபவித்திருப்பார். சாதீயச்சதியும்பார்ப்பனியசமூகப்பின்னணியும்பலதலைவர்களைமாயமாக்கியுள்ளமையைஆணித்தரமாகக்கூறிச்செல்கிறதுவிடுதலைப்போர் :உறைபொருளும்மறைபொருளும்.

மேலும்அச்சியந்திரகோளாறுகள்மற்றும்அதன்பாதிப்புகளும்குறித்துஎழுத்துலகில்சனிபகவான்எனும்பத்தியில்நகைச்சுவைகலந்துகூறியுள்ளார்நூலாசிரியர்.

புகையிலையின்வாசம்பேசும்பத்தி ,கதிர்காமம்அழகிபிரேமாவதியின்படுகொலையின்பரிதாபங்கள், நீர்கொழும்பின்வரலாறு , அரசியலில்நுழைந்ததேங்காய்எனஒவ்வொருபத்தியும்ஒவ்வொருசரித்திரம்கூறியது .

நடுவழியில்இன்பஅதிர்ச்சிஎனும்பத்திஎன்னைசற்றுஅதிர்ச்சிப்படுத்தியது .தனிஈழம்கேட்பதுகுறித்தானகேள்விபதில்அபாரம். பத்தியைஆரம்பிக்கையில்ஒன்றைத்தொடங்கிஅதன்பின்தொடர்ச்சியாகதன்அனுபவத்தைக்கூறிகதைசொல்லியாகமாறிபத்தியைநகர்த்திச்செல்லும்விதம்அற்புதம்.

மூத்தோரிடம்அனுபவங்களைக்கேட்கையில்ஏற்படும்களிப்புஇந்நூலைவாசிக்கையில்ஏற்படுவதையாராலும்மறுக்கமுடியாது .

மேலும்மேலும்புளகாங்கிதப்பட்டுஇந்நூலைப்பற்றிப்பேசிக்கொண்டேஇருக்கலாம். சமகாலஇளைஞர்யுவதிகள்இந்நூலைமுழுமையாகவாசித்துப்பயன்பெறவேண்டும்என்பதுஎனதுஅவாவாகும்.

( மட்டக்களப்புஅரங்கம்மற்றும்   “கா “ இலக்கியவட்டம்ஒழுங்குசெய்தநிகழ்ச்சியில்சமர்ப்பிக்கப்பட்டது)

Share:

Author: theneeweb