ஒன்பது வயது சிறுவனை கொண்டு குளோரின் கலந்த சுகாதார பணியாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த இந்துபுரம் கிராமத்தில் ஒன்பது வயது சிறுவனை கொண்டு குளோரினை கலந்து கிணற்றில் ஊற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கிணறுகளில் வெள்ள நீர் கலந்துள்ளமையால் அவற்றை சுத்தம் செய்யும் பணியின் பொருட்டு இந்துபுரம் கிராமத்தில் உள்ள கிணறுகளில் குளோரின் விடும் பணிகளுக்காக இன்று 27-12-2018 சென்ற சுகாதார பணியாளர்கள் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டில் இருந்து ஒன்பது வயது சிறுவனை அழைத்து குளோரினை கலந்து கலக்கி தருமாறு கோரி குளோரினை வழங்கியுள்ளனர்.

 

சிறுவனும் அவர்கள் குறிப்பிட்டது போன்று கலந்து அவர்களிடம் வழங்கிய போது அதனை கிணற்றில் விட்டுச் சென்றுள்ளனர். குறித்த இச் சம்பவம் தொடர்பில் பெற்றோர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb