நீர்கொழும்பில் பண்டிதர் கதிரேசர்மயில்வாகனனார் (1919 – 2019) நூற்றாண்டுவிழா

 

வடமேற்கு இலங்கையில் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் 1954 ஆம் ஆண்டு விவேகானந்தாவித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்துமத்தியகல்லூரியின் முதலாவது  தலைமைஆசிரியரும் முத்தமிழ் அறிஞரும் பன்னூலாசிரியருமான கதிரேசர்மயில்வாகனனார் (1919 – 2019)  அவர்களின் நூற்றாண்டு விழாநாளை 09 ஆம்திகதிசனிக்கிழமை மாலை3.00மணிக்கு கல்லூரி பிரதானமண்டபத்தில் ஆரம்பமாகும்.

கல்லூரியின்ஸ்தாபகர்( அமரர் ) எஸ்.கே. விஜயரத்தினம் அவர்களின்மருமகளும் நீர்கொழும்புமாநகரசபையின் முன்னாள்பிரதிமேயர் ( அமரர்) ஜெயம்விஜயரத்தினம் அவர்களின் துணைவியாருமான திருமதியோகேஸ்வரி ஜெயம்விஜயரத்தினம் மற்றும்கல்லூரியின் முன்னாள் மாணவரும் அவுஸ்திரேலியாவில் இயங்கும்தன்னார்வதொண்டுநிறுவனமானஇலங்கைமாணவர்கல்விநிதியத்தின்முன்னாள்தலைவரும்பரிபாலனசபைஉறுப்பினருமானதிரு. இராஜரட்ணம்சிவநாதன் ஆகியோர்முதன்மைவிருந்தினர்களாகஇவ்விழாவில்கலந்துகொள்வர்.

 

கல்லூரியின்அதிபர்திரு. ந. புவனேஸ்வரராஜாவின்தலைமையில் நடைபெறவுள்ளஇவ்விழாவில், பண்டிதரின்திரு உருவப்படம் கல்லூரிபிரதானவாயிலிருந்துமண்டபம்வரையில்மாணவர்அணிவகுப்புமற்றும்கல்லூரிபேண்ட்வாத்தியத்துடன்ஊர்வலமாகஎடுத்துவரப்படும்.

கல்லூரிவளாக சித்திவிநாயகர் ஆலயத்தில்நடக்கும் பிரார்த்தனையுடன் தொடங்கும்இவ்விழாவில், மாணவிகளின் வரவேற்புநடனத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

கல்லூரியின்முன்னாள்மாணவியும்கல்லூரியின்தற்போதையஆசிரியையுமானதிருமதிசுசீலகுமாரிநீதிராஜாவரவேற்புரைநிகழ்த்துவார்.

அதிபர்திரு. ந. புவனேஸ்வரராஜாவின்தலைமையுரையைதொடர்ந்து, முன்னாள்அதிபர்கள்திருவாளர்கள்நா. கணேசலிங்கம், வீ. நடராஜாமற்றும்பண்டிதருடன்தொடக்ககாலத்தில்பணியாற்றியஆசிரியைதிருமதிதிலகமணிதில்லைநாதன்ஆகியோர்சிறப்புரையாற்றுவர்.

பழையமாணவர்மன்றத்தின்ஸ்தாபகஉறுப்பினரும்இந்துஇளைஞர்மன்றத்தின்செயலாளருமானதிரு. சு. நவரட்ணராஜா, மற்றும்கல்லூரிஅபிவிருத்திச்சங்கபிரதிநிதிகள்,  பழையமாணவர்மன்றத்தின்பிரதிநிதிகளும்உரையாற்றுவர்.

அய்ரோப்பாவில்தயாரிக்கப்பட்டபண்டிதரின்வாழ்வையும்பணிகளையும்சித்திரிக்கும்ஆவணப்படமும்திரையிடப்படும். பிரான்ஸில்வெளியிடப்பட்டபண்டிதர்நூற்றாண்டுமலர்தொடர்பானஅறிமுகவுரையைஎழுத்தாளர்திரு. முத்துலிங்கம் ஜெயகாந்தன்நிகழ்த்துவார்.

அவுஸ்திரேலியாவிலிருந்துஇயங்கும்இலங்கைமாணவர்கல்விநிதியத்தின்ஏற்பாட்டில்இக்கல்லூரியில்பயிலும்மாணவர்கள்சிலருக்குஇந்தஆண்டிற்கானமுதற்கட்டபுலமைப்பரிசில்நிதியுதவியும்கல்லூரியின்தொடக்ககாலவளர்ச்சியில்ஈடுபட்டசமூகப்பணியாளர் ( அமரர் ) செல்லையாஅவர்களின்ஞாபகார்த்தமாகபிரான்ஸில்வதியும்அன்னாரின்புதல்விராணிமலர்செல்லையாவின்ஏற்பாட்டில்மாணவருக்குகற்றல்உபகரணங்களும்வழங்கப்படும்.

நூல்கள்வெளியீடு

இவ்விழாவின்இரண்டாம்அரங்கத்தில்பண்டிதர்மயில்வாகனனார்தலைமைஆசிரியராகபணியேற்ற1954 ஆம்ஆண்டுகாலத்தில் ஏடுதுவக்கிவித்தியாரம்பம்செய்விக்கப்பட்டுமுதல்மாணவராகஇணைத்துக்கொள்ளப்பட்டஎழுத்தாளரும்ஊடகவியலாளருமானதிரு. லெ. முருகபூபதியின்சொல்லத்தவறியகதைகள்நூலும்குழந்தைகளுக்குசமர்ப்பிக்கப்பட்டசொல்லவேண்டியகதைகள்நூலும்வெளியிடப்படும்.

கல்லூரியின்முன்னாள்மாணவியும்பிரதிக்கல்விப்பணிப்பாளருமானசெல்விபாமினிசெல்லத்துரை, இலக்கியப்படைப்பாளியும் ஊடகவியலாளருமானதிரு. கருணாகரன் ஆகியோர்நூல் மதிப்புரைகளை நிகழ்த்துவர்.

நீர்கொழும்புஇந்துஇளைஞர்மன்றத்தின்தலைவரும்சமூகப்பணியாளருமானதிரு. ஜெயராமன் ,இந்துஇளைஞர் மன்றத்தின் பொருளாளரும்சமூகப்பணியாளருமான திரு. ஏகாம்பரம்மற்றும் கல்லூரியின்முன்னாள்மாணவரும்சமூகப்பணியாளருமானதிரு. ஜெகநாதன் தேவராஜா ஆகியோர் சிறப்புபிரதிகளை பெற்றுக்கொள்வர்.

பிரான்ஸில்கடந்தஜனவரிமாதம்நடந்தபண்டிதரின்நூற்றாண்டுவிழாவில்கலந்துகொண்டுதாயகம்திரும்பியிருக்கும்விழாநிகழ்ச்சிஒருங்கிணைப்பாளரும்எழுத்தாளருமானதிரு. லெ. முருகபூபதி ஏற்புரைநிகழ்த்துவார்.

விஜயரத்தினம்இந்துமத்தியகல்லூரிசமூகம்இவ்விழாவைஒழுங்குசெய்துள்ளது.

கல்லூரி  முன்னாள்மாணவர்களும் பெற்றோர் – ஆசிரியர்களும்கலை, இலக்கியஆர்வலர்களும்அழைக்கப்படுன்றனர்.

—-0—

 

 

 

Share:

Author: theneeweb