கட்டி முடிக்கப்பட்டுள்ள 8 ஆயிரம் வீடுகள்…

மலையகத்தில் சுமார் 8 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மலையகத்தில் அனைவருக்கும் தனி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சுமார் 8 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, எதிர்வரும் 2020 ஆண்டில் 50 ஆயிரம் வீடுகளை பூர்த்தி செய்வதற்கு முனைப்போடு பணிகள் இடம்பெற்று வருகின்றதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb