போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை…

ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் ஊடாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடல் மார்க்கமாக கொண்டுவரப்படும் பொருட்கள் நாட்டை வந்தடைந்ததன் பின்னரே கைப்பற்றப்படுகின்றன.
இந்த நிலையில், நாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னர், குறித்த படகுகளை கடலில் வைத்தே கைப்பற்றி அழிப்பதற்கு இயலுமாக இருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள், ஈரான் ஊடாக படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது.
தெற்கு கடல் மார்க்காக, மாலைதீவுக்கு அப்பால் சென்று இலங்கையின் தென் பகுதிக்கு இந்த போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி தெரிவித்துள்ளார்.
Share:

Author: theneeweb