அட்மிரல் கரண்ணகொட மீதான வழக்கு எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களை திருப்திப் படுத்துவதற்காக அல்ல, ஆனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கே

ரங்க ஜயசூரிய—-

 

நீண்ட பயங்கரவாதப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடிவைக் காண்பதற்கான ஸ்ரீலங்காவின் முயற்சி இரண்டு சித்தாந்த தீவிர கருத்தியல்களால் தடைப்பட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் மற்றையதின் நிகழ்ச்சி நிரலுக்கு ஊக்கம் ஊட்டுகிறது. தராசின் ஒரு முனையில் உள்ள சிங்களத் தீவிர தேசியவாதிகள் மற்றும் தென்பகுதி தேர்தல்கள் பற்றிய அரசியல் கணிப்புகள் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் மீது கூட வழக்குத் தொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் கடந்தகால மற்றும் தற்கால முயற்சிகள் எல்லாவற்றையும் கிட்டத்தட்ட எதிர்க்கின்றன. இதேபோல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பனவற்றை சில சுயசேவைச் சூழ்ச்சிகள் பின்னுக்குத் தள்ளுகின்றன.

ற்றைய தீவிர முயற்சிகள், எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள், அவற்றுடன் இணைந்த குழுக்கள் மற்றும் ஊதியம் பெறும் கூலிப்படைகள் ஆகியவை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர்கள் நிதியுதவி வழங்கிவந்த மகா மோசமான பயங்கரவாத குழுவைத் தோற்கடித்ததுக்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இழிவுபடுத்தவேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன. எல்.ரீ.ரீ.ஈ இனது அழிப்பு ஒரு முடிந்து போன செயல் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அது தமிழ் பிரிவினைவாதப் பிரச்சாரம் மூலம் கிடைக்கும் பயன்களுக்கு அப்பாற்பட்டது (இருந்தும் கொழும்பில் உள்ள மற்றொரு அரசாங்கம் தனது தலையை மண்ணுக்குள் புதைத்த நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் மிகவும் குறுகிய சுயாதீன வரலாற்றில் மூன்று முறைகள் இடம்பெற்ற பேருந்து குண்டுத் தாக்குதல்கள் போன்று மற்றொரு தாக்குதல் நடக்கும்போது முரட்டுத்தனமாக உறக்கம் கலைந்து எழுகிறது). ஆகவே சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை, போரில் தோற்றதுக்காக வேண்டப்படும் ஒரு ஆறுதல் பரிசாக இருக்கும்.

ஸ்ரீலங்கா முன்னோக்கி நகரவேண்டுமானால் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான மனக்குறைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக நன்கு ஆவணப்படுத்தியுள்ள சம்பவங்களை இழைத்த குற்றவாளிகள் மீதாவது வழக்குத் தொடரவேண்டும். அதன் ஐரோப்பிய நண்பர்களின் விருப்பத்திற்காக அப்படிச் செய்யாது, தேசிய நலன்கள் பற்றிய அதன் சொந்த கணக்குக் கூட்டல்களின் கட்டளைப்படி சொந்த விருப்பத்தின் பேரில் அதைச் செய்ய வேண்டும். அல்லது அரசாங்கம், புலிகளை நேசிக்கும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் உள்நாட்டு பங்காளர்களைச் சமாதானப் படுத்துவதற்காக அதைச் செய்யக்கூடாது.

உண்மையில் நீதியின் சக்கரங்கள் மெதுவாகச் சுழன்றாலும் ஆனால் சீராகச் சுழல்கின்றது. சடடமா அதிபர் திணைக்களம் சொல்வதினபடி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணகொட மற்றும் ஏனைய அதிகாரிகள், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற்போக்கடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்கள். சி.ஐ.டி யினர் குற்றம் சாட்டியுள்ளதின்படி அட்மிரல் கரண்ணகொட, தனது சொந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான லெப். கமாண்டர் சம்பத் முனசிங்காவின் தலைமையில் செயற்பட்ட ஒரு கடற்படைப் பிரிவினர் 11 இளைஞர்களைக் கடத்தி சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பதற்கு உடந்தையாக இருந்தார் என்றும் அதேபோல குறைந்தபட்சம் ஐந்து இளைஞர்களைக் காவலில் வைத்திருப்பது பற்றி தகவலை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை மறைத்து வைத்தார் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படைத் தலைவர் சரியான நேரத்தில் செயற்பட்டிருந்தால் அந்த உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும் என சி.ஐ.டி யினர் கண்டறிந்துள்ளனர்.

முன்னதாக, கொழும்பு பிரதம நீதவான் அட்மிரல் கரண்ணகொடவின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தார். அவரைத் தாங்கள் தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். முன்னதாக தன்னைக் கைது செய்வதைத் தடைசெய்யும்படி ஒரு நீதிமன்ற உத்தரவினைக் கோரி அவர் ஒரு அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். முன்னாள் கடற்படைத் தளபதியை சி.ஐ.டி யினர் கைது செய்யமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் மறுத்துவிட்டது. அந்த மனுவை இந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

கடற்படைபிரிவு, செல்வந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளைக் கடத்தி மிரட்டி மிகப் பெருமளவில் கப்பம் பெறும் ஒரு இலாபகரமான கடத்தல் மோசடியில் ஈடுபட்டிருந்ததாக சி.ஐடி யினர் குற்றஞ்சாட்டியிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் மூன்று முன்னாள் தளபதிகளான விமானப்படை தளபதி றோசான் குணதிலகா, ஜெனரல் தயா ரட்னாயக்கா மற்றும் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க ஆகியோர் முன்னாள் கடற்படைத் தயபதியை பாதுகாக்க வந்துள்ளார்கள். தற்போது நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளை அவர்கள் விமர்சித்தார்கள், அவர்கள் தெரிவித்தது என்னவென்றால், போர் நடந்து கொண்டிருக்கும்போதுதான் இந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளன மற்றும் அட்மிரல் கரண்ணகொட ஒரு கடற்படை மூலோபவியலாளர் அவர் கடற்புலிகளைத் தோற்கடித்தவர் என்று.

அந்த சத்தங்கள் எதுவும் சட்டத்தையோ அல்லது சாதாரண பொது அறிவையோ சம்மதிக்க வைப்பதாக இல்லை. தவிரவும் முன்னாள் சேவைத் தளபதிகள், கப்பம் பெறுவதற்காக பிள்ளைகளைக் கடத்தியது எவவாறு எல்.ரீ.ரீ.ஈ இனைத் தோற்கடிக்க உதவியது என்பதை; விளக்கவும் இல்லை. போரை வெற்றிகொண்ட முந்தைய ஆட்சி எல்.ரீ.ரீ.ஈ உடனான போரின்போது பாதுகாப்பு படையினருக்கு கிட்டத்தட்ட ஒரு சுதந்திரமான முடிவெடுக்கும் நிலையினை வழங்கியிருந்தது, மற்றும் அதில் குறைபாடுகள், தவறுகள் மற்றும் திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றது பற்றி அது விசாரணை நடத்தவில்லை. இந்த தன்னிச்சையான கடந்தகால செயற்பாடுகளின் ஆவியினால் இப்போது நல்லிணக்கச் செயற்பாடுகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

பின்னர் ஸ்ரீலங்காவிலுள்ள பிரிவினைவாத அரசியல், நல்லிணக்கத்துக்கான அர்த்தமுள்ள எந்த ஒரு முன்முயற்சியையும் தடுத்துவருவது பற்றி ஒரு வரலாறே உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி, அட்மிரல் கரண்ணகொடவிற்கு எதிரான சட்ட நடவடிககைகளை தமிழர்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கானதும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் மற்றும் தமிழ் புலம்பெயர் சமூகத்தையும் திருப்திப் படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய ஒரு பிரச்சாரம் என விபரித்துள்ளது.

மேலும் ஏராளமான சுயநல சந்தர்ப்பவாதிகள்,மதவெறியர்கள், வேலையற்ற கிறுக்கர்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளைப்பற்றி குற்றம் சொல்லி வருகிறார்கள். சுவாராஷ்யமான முறையில் இந்தக் குழுக்கள் பழைய காயங்களைக் குணப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு முயற்சிகளை எதிர்க்கின்றன. உண்மையில் இந்த உள்நாட்டு முன்முயற்சிகள் சர்வதேச விசாரணைக்கான அழைப்புகளை அடக்குவதுடன் மற்றும் ஈழப்போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிய சர்வதேச விசாரணையைத் தூண்டும் உலகளாவிய அதிகார வரம்புகளையும் தடை செய்கின்றன.

உள்நாட்டு முன்முயற்சிகளை தடுக்கும் இந்தக் குழுக்கள் அவர்களது கருத்தியல் எதிரிகளான தமிழ் புலம்பெயர் தரப்பினருக்கு ஒருவகையில் உதவி செய்கின்றன. இந்தக் குழுக்கள் ருத்திரகுமாரது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலுமுள்ள எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள் போன்ற இந்தக் குழுக்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களின் நலன்களினால் உந்துதல் பெறவில்லை. அல்லாமலும் மிகவும் வெளிப்படையான உள்நாட்டு முன்முயற்சிகளிலும் அவர்கள் திருப்தியடையவில்லை. இந்தக் குழுக்கள் (மற்றும்) ஒரு பயங்கரவாத குழுவின் உதிரிப்பாகங்களும் மற்றும் பங்காளிகளும் ஆவர் அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும். சாதகமான ஈடுபாடுகள் மூலம் அவர்களது நடத்தையில் மாற்றத்தை எதிர்பார்ப்பது அப்பாவித்தனமானது. எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்களைத் தேடும் உலகளாவிய வேட்டை கேபி உடன் முடிந்துவிடவில்லை. மேற்கின் தலைநகரங்களில் எல்.ரீ.ரீ.ஈ இனது கொடி காட்சிப் படுத்தப்படுவதைப் பற்றி ஸ்ரீலங்காவில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தமது அதிருப்தியை வெளிக்காட்டுவதில் தோல்வியுற்றது அரசின் அலட்சியத்துக்கான ஒரு சான்றாகும்.

இறுதியாக வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு கூறு உள்ளது. பிரித்தானியா தலைமையிலான ஏனைய முக்கிய குழுக்கள் கொண்டுவரவுள்ள மற்றுமொரு ஐநா மனித உரிமைகள் சபை (யு.என்.எச்.ஆர்.சி) பிரேரணைக்கு மீண்டும் ஸ்ரீலங்கா இணை அனுசரணை வழங்க எதிர்பார்த்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த முந்தைய யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகுவதாக எடுத்திருந்து முந்தைய திட்டத்துக்கு முற்றிலும் மாறான ஒரு தலைகீழ் திருப்பம் மற்றும் மிகவும் விவேகமானதும் கூட

எனினும் தற்போதைய ஐதேக தலைமையிலான அரசாங்கம் எதற்கும் மற்றும் எல்லாவற்றுக்கும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவையே சார்ந்துள்ளது, மாறாக டொனால்ட் ட்ரம்ப்பின் கீழுள்ள அமெரிக்கா ஏற்கனவே அதன் முக்கியத்துவம் குறைந்த கூட்டாளிகளை கைவிட்டுவிட்டது, அது நாட்டுக்கு நல்லது இல்லை. நேரத்தைப் பரிசோதிக்கும் சீனாவின் நட்பு நாடுகளில் இருந்து வளர்ந்து வரும் பற்றின்மையில் குறிப்பாக தனிப்பட்ட மற்றும் சித்தாந்த முன்னுரிமைகளால் உந்தப்பட்ட இந்த தெரிவுகள் வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அளவுக்கு அதிகமாக பீஜிங்;கினைச் சார்ந்திருக்கும் ஸ்ரீலங்காவின் நிலைப்பாடு உகந்த ஒன்றல்ல, எனவே எந்தவொரு வெளியுறவுக் கொள்கைத் தேர்வும் அதன் செலவிலேயே வரும், ஏனென்றால் சீனாவிடம் அளவுக்கு அதிகம் நிதி வசதி உள்ளது. இது எதிரான சர்வதேச அழுத்தங்களில் இருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்கும் நல்ல ஒரு திட்டம் மற்றும் சுதந்திரமான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

தமிழர்களின் தேசிய பிரச்சினையையும் மற்றும் பிரிவினைவாத பயங்கரவாதத்தின் தாக்கங்களைத் தீர்ப்பதற்கும் ஸ்ரீலங்கா சுயாதீனமான ஒரு நடவடிக்கையைத் திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்வதினால் தெற்கிலுள்ள மதவாத தேசியவாதிகளின் அல்லது மேற்கிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ இனது எச்சங்கள் மற்றும் உள்நாட்டிலுள்ள அதன் மிச்சங்கள் தங்களது நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஏற்ப நடக்கும்படி அதற்கு கட்டளையிட முடியாது.

 

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ். குமார்

Share:

Author: theneeweb