சிகிச்சை பெற்று வந்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு OIC உயிரிழந்தார்

விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

கடந்த 24ம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலிஸ் பரிசோதகர் படுகாயமடைந்திருந்தார்.

விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Share:

Author: theneeweb