சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாளை நட்ட ஈடு

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் முதல் கட்ட வேலைத்திட்டம் நாளை அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றன.

முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்வுள்ளது. இதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Share:

Author: theneeweb