கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் 4 பேர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி – தேற்றாத்தீவுக் பிரதேசத்தில் அண்மையில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள், ஒருத் தொகை பணம் மற்றும் கையடக்க தொலைப்பேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள், பாண்டிரப்பு, மருதமுனை, ஏறாவூர், களுவாஞ்சிகுடி, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb