யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியளவில் 150 உதா கம்மான வீடமைப்புத் திட்டத்திதை ஆரம்பிக்க உள்ளோம்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிப் பகுதியளவில் 150 உதா கம்மான வீடமைப்புத் திட்டத்திதை ஆரம்பிக்க உள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 106 உதா கம்மான வீடமைப்புத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மேலும் 150 உதா கம்மான திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்புத் திட்டத்திற்காக 5.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாத இறுதிக்குள் நாடுமுழுவதும் 2,500 உதா கம்மான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பதே தமது அமைச்சின் இலக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இரண்டாம் கட்டமாக 5,000 உதா கம்மான வீடமைப்புத் திட்டமும், மூன்றாம் கட்டமாக 10,000 வீடமைப்புத் திட்டமும், நான்காம் கட்டமாக 2,500 வீடமைப்புத் திட்டமும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடுமுழுவதும் 20,000 உதா கம்மான வீடமைப்புத் திட்டத்தை 2020ஆம் ஆண்டில் மக்களிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb