அரச நிறுவன முறைகேடுகள் தொடர்பில் 610 முறைப்பாடுகள்

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 610 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றில் 320 முறைப்பாடுகளை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.

2015 ஜனவரி 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான 4 வருடங்களுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் செயற்பாடுகள், நிறுவன நம்பிக்கையை மோசடி செய்தல், முறையற்ற வளப் பாவனை தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளைப் பெற்று, அவை தொடர்பில் விசாரித்தல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

எழுத்துமூல முறைப்பாடுகளை அல்லது தகவல்களை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில்

செயலாளர்,
அரச நிறுவன முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு,
அறை இலக்கம் 210, 2 ஆவது மாடி,
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம்,
பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 07

எனும் முகவரிக்கு சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மொழி மூலம் தகவல்களைத் தெரிவிக்க 011-2665382 எனும் இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்

முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.

எனினும், ஜனாதிபதியினால் அந்த கால எல்லை 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb