தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் திறந்து வைப்பு

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி அலுவலகம் இன்று(10) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இல.258 ஆனந்தபுரம் கிழக்கில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மஞ்சல், வெள்ளை கொடிகளுடன் இளைஞர்களின் உந்துருளி பவனியுடன் இன்று காலை பத்து மணியளவில் முன்னாள் முதலமைச்சர் வருகை தந்து கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.

அத்தோடு கட்சியின் கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த அருந்தவபாலன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்களான றெஜி, ஆழாலசுந்தரம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share:

Author: theneeweb