விடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும்

பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் விடுமுறை நாட்களில் முற்பகல் பத்து மணி வரை யே  வெளிநோயாளர் பிரிவில்  பொது மக்கள் சிகிசை பெற்று வந்தனர். இதனால் பெருமளவான மக்கள் சிகிசையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்த நிலையில் பொது மக்களின் கோரிக்கைக்க அமைவாக மதியம் 12 மணி வரை வெளிநோயாளர் பிரிவில் சிகிசை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் விடுமுறை நாட்களில் மதியம் 12 பொது மக்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிசை பெற்றுக்கொள்ள முடியும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் காண்டீபன்  அறிவித்துள்ளார்214
Share:

Author: theneeweb