மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்

மருதங்கேணி வைத்தியசாலையில் இருபத்து நான்கு மணிநேரமும் வைத்தியர்கள் கடமையில்இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மருதங்கேணி வைத்தியசாலைக்கு முன்பாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரசாந்தனினால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் தொடக்கம் இவ் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

மருதங்கேணி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட    வைத்தியர்கள் எங்கே, மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை சீராக இயக்குக, நோயாளர் காவுவண்டிக்கு சாரதி இருக்கிறார் நோயாளர் காவுவண்டி இல்லை.

இவை அனைத்தும் நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இக் கோரிக்கை நிவர்த்தி செய்யாவிட்டால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb