எத்தியோப்பியாவில் விமான விபத்து: பயணிகள் உட்பட 157 பேர் பலி?

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் ஞாயிறன்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள் உட்பட 157 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு ஞாயிறு நண்பகல் விமானம் ஒன்று புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமானப் 8 பணியாளர்கள் மற்றும் 149 பயணிகள் என மொத்தம் 157 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே கட்டுப்பட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Share:

Author: theneeweb