பிரித்தானிய தமிழர் பேரவையின் பரிதாப நிலை

ராஜசிங்கம் ஜெயதேவன் —

 

அரசியல் ரீதியாகவும் மற்றும் நிதி ரீதியாகவும் திவாலான பிரித்தானிய தமிழர் பேரவை (பிரிஎப்) என்றழைக்கப்படும் தமிழர் பேரவை யுகே லிமிடட், பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுக்களுக்கும் (ஏபிபிஜி – ரி) செயலக சேவை வழங்கும் அதன் சர்ச்சைக்குரிய பாத்திரத்திரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரோகிணி சிவகுருநாதன் எதிர் தமிழர் பேரவை யுகே லிமிட்.(ரோகினி எதிர் பிரிஎப்) வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேள்விக்குரிய பிரித்தானிய தமிழர் பேரவையின் நடத்தை மீது இன்னும் அதிக பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுக்களுக்கும் (ஏபிபிஜி – ரி) சர்ச்சைக்குரிய செயலக சேவை வழங்கும் அதன் பணியை நிறுத்திக்கொண்டு ஏபிபிஜி-ரி பிரித்தானிய தமிழர் பேரவையிடம் (பிரிஎப்) விடைபெறும் தீர்க்கமான நேரம் இது.

(வழக்கில் உள்ளது போல) ஒரு ஒப்பந்தத்தை மீறுதல்,கவனக்குறைவு (அல்லது அவதூறு) ஆகியன சம்பந்தமான பொதுவான சட்டம் தொடர்பான ஒரு சர்ச்சை எழும்போது, அது கீழ்மட்ட வேலைவாய்ப்பு தீர்ப்;பாயத்துக்குப் பதில் றோயல் நீதி மன்றத்தின் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், (இந்த வழக்கில், வழக்கு எண்: டீ01நுஊ08 ஆகும்)


தீhப்பின் 237வது பந்தி தெரிவிப்பது, “கூட்டக் குறிப்புகளை சூழ்ச்சித் திறத்துடன் கையாள்கை, சிதைக்கப்பட்ட பதிவுகள், வேண்டுமென்றே தவறவிடல் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் (பிரிஎப்) நேர்மையற்ற நடத்தை ஆகியன இடம் பெற்றுள்ளன என்று. மேலதிகமாக நீதிபதி கண்டுபிடித்திருப்பது, பிரித்தானிய தமிழர் பேரவை நேரடியான பாகுபாடு, பழிவாங்குதல் மற்றும் கோரிக்கையாளருக்கு கிடைக்கவேண்டிய இயற்கையான நீதி மறுக்கப் படுதல் என்பன இடம்பெற்றுள்ளதாக. செலவுகள் மற்றும் சேதங்களுக்காக பிரித்தானியதமிழர் பேரவைக்கு எதிராக 70,000 பவுண்கள் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது, இது ஏற்கனவே நிதி ரீதியில் திவால் நிலையிலுள்ள பிரித்தானிய தமிழர் பேரவையின் சட்ட ஆயுதமான தமிழர் பேiவை யுகே லிமிடட்டுக்கு மேலதிக கடன் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் சொந்த சட்டச் செலவுகள்பற்றி கணக்குப் பார்க்க முடியவில்லை.

 

துரதிருஷ்டவசமாக சுதந்திரமான தலையீடு மூலம் மாற்றுத் தீர்வு வழியாக தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய ஒரு சர்ச்சை, கௌரவமான ரோயல் நீதி மன்றத்தின் உயர் நீதிமன்ற நடைபாதைகளில் நிகழ்ந்தேறியது, இது பிரிஎப் க்கு எதிரான ஒரு 50 பக்க தீர்ப்பில் முடிவடைந்தது.

பிரித்தானிய தமிழர் பேரவைக்கு எதிரான புதிய யோசனைகளைக் கொண்ட தீர்ப்பு, உற்சாகமான தமிழ் இணைய ஊடகங்களினதோ அல்லது ஸ்ரீலங்காவின் தேசிய ஊடகங்களின் கவனத்தையொ பெறவில்லை. பிரிஎப் இனை ஆதரிக்கும் தமிழ் ஊடக சேவைகள் கூட தங்கள் எஜமானார்களுக்கு வழங்கப்பட்ட துரதிருஷ்டவசமான தீர்ப்பினைக் குறித்து மௌனத்தையே கடைப்பிடித்தன – எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு அல்லாத ஒன்றுக்கு இத்தகைய தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தால் அது மிகத் தீவிரமாகப் பரப்பப் பட்டிருக்கும்.

பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்ட அதன் தன்னிலை அறிக்கையானது (பத்திரிகை அறிக்கை) வழக்கின் உண்மைகளையும் மற்றும் விசாரணையின் விளைவுகளையும் பற்றி விளக்குவதில் தோல்வி அடைந்தது. மொழி பெயர்ப்பாளர்கள் தெரிவிப்பது, அந்த இரண்டு மொழிப் பதிப்புகளுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கிறது என்று. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சரளமான அறிவுள்ள வாசகர்கள் குறிப்பாக வழக்கறிஞர்கள், அதன் சாரம் மற்றும் சட்ட நடைமுறைகளைக் குறித்து தங்கள் சொந்த முடிவினையே வரைய முடியும். பெயர் வெளியிட விரும்பாத கவலையடையும் ஒரு பிரிஎப் ஆர்வலர்,பத்திரிகை அறிக்கை முழுவதும் நேர்மையற்ற நியாயப்படுத்தல்கள் மற்றும் பொய்கள் நிறைந்துள்ளன என்பதை உறுதி செய்தார். வருத்தம் அல்லது கழிவிரக்கம் கொண்ட ஒரு ஒற்றை வார்த்தை கூட அதில் இடம்பெறவில்லை.

பிரித்தானிய தமிழர் பேரவை தீர்ப்புடன் ஒத:துப்போகாமல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரங்களை மூடிமறைக்கலாம்; என்கிற நம்பிக்கையில் உயர்நீதிமன்றம் தங்களை நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டது என்று அதனை அப்பட்டமாகக் குற்றம் சாட்டியது, ஆனால் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளாமல், தங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட முயற்சிக்கவில்லை என்று உரிமை கோருபவரைக் குற்றம் சாட்டியது. இந்த விடயங்கள் பொதுவான கோரிக்கைகளை முற்றாகத் தவறாக வழி நடத்துவதுடன் நீதிமன்றம் நியாயமற்ற முறையில் நடந்துள்ளது என்று சாதாரண பொதுமக்கள் சொல்லும்படி செய்துள்ளது. சட்ட ஆலோசனை வழங்கிய கவலையடையும் ஆர்வலர் “அவர்கள் (பி.ரி.எப்) நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்காமல் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பைப்பற்றி மக்கள் தவறாக எண்ணும்படி விஷயங்களைக் கையாண்டு தொடர்ந்து வீம்பாக நடந்து கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார். அந்த ஆர்வலர் பின்னர் இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என அச்சத்துடன் சொன்னார்.

இந்த நடத்தையின் விளைவாக பாராளுமன்ற நியமங்கள் ஆணையர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுக்களுக்கும் (ஏபிபிஜி – ரி) செயலக சேவை வழங்குவதன் மீது தடைகளை அமலாக்கியுள்ளார். பிரிஎப் பக்கத்தில் இருந்து சட்டபூர்வமான தோல்வி மற்றும் பிரிஎப் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் தமிழர் பேரவை யுகே லிமிட்டட்டுக்கு நிதி ரீதியாக திவாலாகும் நிலையை உருவாக்கியுள்ளதுடன், நம்பிக்கையின்மீது கடுமையான மீறலைத் தோற்றுவித்துள்ளதுடன் நீதியான கடமைக்கு ஒரு தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரிஎப் ஒரு திருப்தியற்ற மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பையும் கொண்டுள்ளது மற்றும் ஏபிபிஜி – ரி ஒருங்கிணைப்பாளர் உட்பட அதன் ஒப்பந்தகாரர்களுக்கு நேரத்துக்கு கொடுப்பனவுகளை வழங்கவும் தவறியுள்ளது – அடிக்கடி மாதக்கணக்கில் நிலுவை உள்ளது. கம்பனி ஹவுஸ_க்கு சமர்ப்பித்துள்ள 2017 டிசம்பர் 31ல்முடிவடைந்த வருடத்துக்கான அதன் நிதி நிலை அறிக்கை அதன் நிகர பற்றாக்குறை 136,382 பவுண்கள் எனக் காட்டுவது, அதன் திவாலாகும் நிலையை உறுதிப்படுத்துவதுடன் மற்றும் ஏபிபிஜி – ரி க்கு செயலக சேவை வழங்குவதிலிருந்து அவர்கள் அகற்றப்படுவதற்கான வழியை இந்தப் பிரச்சினைதான் வகுத்திருக்க வேண்டும். இந்த தீர்ப்புடன் நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதன்மீது விதிக்கப்பட்ட அபராதத்தொகையைச் செலுத்துவதற்கு வழியமைக்காவிட்டால், மேலும் சுமார் 70,000 பவுண்கள் நிகரக் கடன் சுமை அதன்மீது வந்து விழும்.


 

 

• 31 டிசம்பர்,2017 வருட முடிவில் இந்த நிறுவனம், சிறிய நிறுவனங்கள் தொடர்பான நிறுவனங்கள் சட்டம் 2006 பிரிவு 477ன் கீழ் வரி விலக்குக்கு உரித்துள்ளது.
• நிறுவனங்கள் சட்டம் 2006, பிரிவு 476ன்படி அங்கத்தவர்கள்,நிறுவனம் ஒரு கணக்காய்வுத் தணிக்கையை பெறுவதை அவசியப்படவில்லை.

• நிறுவனச்சட்டம் 2006ன்படி பணிப்பாளர்கள் கணக்குப் பதிவுகள் மற்றும் கணக்குகள் தயாரிப்பு என்பதற்கு இணங்க அவர்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

• கணக்குகள் யாவும் நுண் நிறுவன விதிகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டு நிறுவனங்கள் விடயத்தில் சிறிய நிறுவனப் பிராந்தியங்களின் விதிகளுக்கு பொருந்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

28 செப்ரம்பர் 2018ல், பணிப்பாளர் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

அவர்கள் சார்பாக கையொப்பமிடப்பட்டது
கே. நிர்மலன்,பணிப்பாளர்

இந்த ஆவணம் மின்னியல் தொடர்பாடலைப் பயன்படுத்தி வெளியிடப் பட்டதுடன் மின்னியல் வடிவம் தொடர்பான பதிவாளரின் சட்டங்களுக்கு அமைய அங்கீகரிக்கப்பட்டது, அங்கீகாரம் மற்றும் வெளியிடும் முறை என்பன நிறுவனங்கள் சட்டம் 2006 பிரிவு 1072ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரக்தி நிலையில் இருந்த பிரித்தானிய தமிழர் பேரவை (பிரிஎப்), பிரிஎப் தமிழர் அமைப்பு யுகே லிமிட்டட் என்கிற மற்றொரு நிறுவனத்தை உருவாக்கியது. கொம்பனிகள் ஹவுஸில் பதியப்பட்ட விபரங்கள் பின்வருவன: நிறுவன இலக்கம் 11829919 – ஒருங்கிணைக்கப்பட்ட திகதி 15 பெப்ரவரி 2019, விலாசம் 12,ஹெல்மெட் றோ, லண்டன் ஐக்கிய இராச்சியம், நுஊ1ஏ 3ஞது. தமிழர் பேரவை யுகே லிமிடட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே மற்றொரு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்.

அது சுமையாகவுள்ள தமிழர் பேரவை யுகே லிமிட்டட்டை தூக்கியெறிந்துவிட்டு உத்தியோகபூர்வமாக திவாலாக்கும் செயல்முறையை மேற்கொள்ளும் தெளிவான ஒரு நடவடிக்கை அல்லது நீதிமன்ற உத்தரவான சுமார் 70,000 பவுண்களை கொடுப்பதை அவமதிக்கும் விதமாக கம்பனிகள் ஹவுஸில் வெறுமனே விண்ணப்பிக்கும் ஒரு செயல்முறை. எதுவாக இருப்பினும் அவர்களின் நோக்கம் பிரித்தானிய தமிழர் பேரவை என்கிற வியாபாரப் பெயரை புதிய பிரிஎப் தமிழர் பேரவை யுகே லிமிடட்டில் தொடர்ந்து பயன்படுத்துவதுதான். எந்த வழியாக இருந்தாலும் பிரிஎப் இற்கு அது அவ்வளவு சுலபமில்லை, ஏனெ;னறால் தமிழர் பேரவை யுகே லிமிடட் இடம் அதைக் கலைப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களின் கட்டணத்தைச் செலுத்துவதற்கு போதிய நிதி கிடையாது ஒருவேளை பிரிஎப் தனிப்பட்ட வகையில் அவர்களுக்கு நிதி வழங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்.

விரக்தியடைந்துள்ள பிரிஎப் பரந்த அளவிலான அதிருப்தி மற்றும் கூக்குரல்களுக்கு இடையே, உடனடியாக நிதி சேகரிக்கும் ஒரு இசை நிகழ்ச்சியை அதிகப் பிரபலம் இல்லாத இசைக்குழுவான ‘லைட் ஒப் ஹோப்’ உடன் இணைந்து 2 மார்ச் 2019ல் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய தமிழர் பேரவை யுகே லிமிடட்டின் விபரங்கள்: நிறுவன இலக்கம் 07107934 – ஒருங்கிணைக்கப்பட்டது 17 டிசம்பர் 2009ல் யுனிட் 1, பவுண்டடைன் வர்த்தக மையம், புரோட் லேன், லண்டன் இ N15 4யுபு என்கிற விலாசத்தில். பிரிஎப் இனது உத்தியோகபூர்வ செயற்பாட்டு விலாசம் ஒரே ஒரு வளமுள்ள தமிழ் சமூக வீடமைப்புசங்கம் லிமிட் (ரிசிஎச்ஏ), ஆகும் – இந்த நிறுவனம் தொழில்துறை வருங்காலவைப்பு சமூக சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது ஆகும் – இந்தச் சட்டத்தின் கீழ் தொண்டு நிலையை அனுபவித்து வருகிறது. ஒழுங்கு படுத்தப்பட்ட மற்றும் அரசியல் சாராத இந்த அமைப்பு, தனது வளாகத்தை அரசியல் சார்பானதும் திவாலானதுமான பிரிஎப் இற்கு பதிவு செய்யப்பட்ட அலுவலகமாக பயன்படுத்தவும் வசதியளித்துள்ளது, அதன் மாநாட்டு அறையை பிரிஎப் அரசியல் கூட்டம் நடத்தவும் இடமளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய ஏற்பாடான தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவிற்கு செயலக சேவை பிரிஎப் இனால் வழங்கப்பட்டது, ஏபிபிஜி – ரி இற்கான நிருவாக சேவை பிரிவின் கீழ் அதன் உத்தியோகத்தர்களுக்கு பிரிஎப் கொடுப்பனவை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. 18 ஜூலை 2018 முதல் 17 ஜூலை 2019 வரையான காலப்பகுதிக்கான பாராளுமன்றப் பதிவுகளில் நன்மைகளுக்கான செலவு என 1,500 – 3,000 பவுண்கள் பாராளுமன்றப் பதிவேடுகளில் பதியப் பட்டிருந்த போதிலும், ஏபிபிஜி – ரி செயலகத்தை நிருவகிப்பதற்கான மறைமுகச் செலவுகள் அதைவிட மிக அதிகமானது என பிரிஎப் தெரிவிக்கிறது மற்றும் சீர்கேடான நிருவாகம் மற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமையுடனும் சிக்கியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

பிரிஎப் இனால் ஏற்படுத்தப்பட்ட பாராளுமன்ற தரநிலைகளில் உள்ள பன்மடங்கு மீறல்கள் பற்றி, ஏபிபிஜி – ரி யில் அங்கத்தவர்களாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டவரப்பட்டது. ஆனால் றோயல் நீதி மன்றத்தால் பிரிஎப் இற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புத்தான் பிரிஎப் இனை கீழே தள்ளிவிட வழிவகுத்த துரும்பு ஆகும்.

ஒரு தசாப்தத்துக்கு மேலாக ஏபிபிஜி – ரி க்கு செயலக வசதி வழங்கும் வசதி படைத்தவராக இருக்கும் பாக்கியம் பிரிஎப் இற்கு கிடைத்தது. ஏபிபிஜி – ரி யானது பிரிஎப் இனது ஊதுகுழலாகப் பார்க்கப்பட்டது மற்றும் பிரிஎப் இன் ஒரு பகுதியாக ஏபிபிஜி – ரியில் செல்வாக்கு பெற முற்பட்ட பரந்த தமிழ் அமைப்புக்கள் எதனையும் அது தடுத்து வந்தது. பிரிஎப் மற்றும் அதனுடன் இணைந்த கூட்டாளிகள் தமது அதிகாரத்துக்கு தடையாக இருக்கும் மற்றைய தமிழ் குழுக்களின் ஈடுபாட்டை எதிர்த்ததால், ஏபிபிஜி – ரி உடன் தொர்புடைய ஏனைய தமிழர்களின் கருத்துக்களை இந்த ஏற்பாடு கட்டுப்படுத்தியது. திரு. கெய்த் வாஸ் பாராளுமன்ற உறுப்பினரின் தலைமையின் கீழ் ஏபிபிஜி – ரி அமைப்பை ஏற்படுத்தியது முதல், ஸ்ரீலங்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை பரந்த தமிழர் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைப்பு செய்வது திட்டமிட்டு அந்நியமாக்கப்பட்டது.

வெளியேறிய அமைப்புக்கள், ஏபிபிஜி – ரி யினது எதிர்ப்பை உள்ளடக்கியதால், ஏபிபிஜி – தமிழர் அமைப்பை ஏபிபிஜி – பிரித்தானிய தமிழர் பேரவை என முத்திரையிட்டன. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ முன்னணியான பிரித்தானிய தமிழ்ச் சங்கம் (பிரிஏ) மற்றும் அதன் பிரதிநிதிகளான எல்.ரீ.ரீ.ஈ கொடிகளை வீதியில் ஏந்திச் செல்லும் அங்கத்தவர்கள் ஆகியோர் திவாலான பிரிஎப் இற்கு அதன் விருப்பத்தை நீட்டிக்க தீவிரமாக உதவுகிறார்கள்.

எனது சொந்த அனுபவத்தில் ஏபிபிஜி உடன் இடைபழகும் ஈடுபாட்டிற்கான எனது முயற்சி ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது – பிரிஎப் மற்றும் அதன் கூட்டாளிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட ஒரு அனுபவம் அது மற்றும் அடுத்தடுத்து ஏபிபிஜிக்கு க்கு தலைவராக வந்தவர்களால் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. ஏபிபிஜி – ரியின் உருவாக்கம் முதல் தொடர்ச்சியாக அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய மூன்று தலைவர்களுடன் நான் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருந்தேன். பிரித்தானிய பாராளுமன்றம் தன்னை ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் எனக்கூறிக்கொள்கிறது, ஆனால் ஏபிபிஜி – ரியினைப் பொறுத்தவரையில் பரந்த ஜனநாயகக் கருத்துக்களின் குரல்களை அது பிரதிநிதித்துவம் செய்வதில் தோல்வியடைந்துள்ளது.

ஏபிபிஜியின்நிறுவனரான திரு. கீய்த் வாஸ் பாராளுமன்ற உறுப்பினர் எல்.ரீ.ரீ.ஈ முன்னணி சார்ந்த உறப்பினர்களைத்தவிர வேறு முன்னணிகள்; பாராளுமன்றக் குழுக்களுடன் ஈடுபாடு கொள்வதற்கு கடுமையான விரோதம் பாராட்டினார். பாராளுமன்றத்தில் பிரிஎப் ஒழுங்கு செய்தருந்த ஒரு கண்காட்சிக்கு அப்போதைய தலைவராக இருந்த திரு. விரேந்திரா சர்மாவின் அனுமதியுடன் நான் சென்றிருந்தேன் அனால் பிரிஎப் என்னை கண்காட்சி அறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை மற்றும் ஏபிபிஜி – ரி அமைப்பின் நிறுவனரான திரு கீயத் வாஸ் இடம் நான் எனது எதிர்ப்பை வெளியிட்டபோது, சட்டப் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடுமையான எச்சரிக்கை எனக்கு விடுக்கப்பட்டது அதை நான் சாதாரணமாக எடுத்தக்கொள்ளவில்லை.

தற்போது எபிபிஜி -ரி எதிர்கொள்ளும் இடையூறு, அதுபிரத்தியேகமாக பிரிஎப் இனையும் அதன் கூட்டாளிகளையும் தேர்ந்தெடுத்து செயலகத்தை நடத்து பொறுப்பை பிரிஎப் இடம் ஒப்படைத்த விட்டுக்கொடுப்பு இல்லாத நிலைப்பாடுதான் காரணம். பிரிஎப் மற்றும் ஏபிபிஜி -ரி இடையே பின்கதவு வழி பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

பாராளுமன்ற விதிகளுக்கு அமைவான பிரகடனங்களை விடுக்க ஏபிபிஜி – ரி தவறிவிட்டது என அதன்மீது குற்றம் சுமத்தப்படுகிறது, பிரிஎப் நிதி திரட்டுவதற்காக பாராளுமன்ற தோட்டத்தைப் பயன்படுத்தியது, பாராளுமன்ற தோட்டத்தின்; சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியது என்பனவற்றுககு மத்தியில் நேர்மையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக தீர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக பாராளுமன்ற தரநிலை ஆணையர் அமல்படுத்தும் தடைகளுக்கு ஆளாக நேரிடலாம். பாராளுமன்ற உறப்பினர்களுக்கு இதை வெளிப்படுத்தாமலிருந்தது தீவிரமான மீறல் குற்றச்சாட்டு ஆகும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 

 

Share:

Author: theneeweb