பெருகி வரும் சமத்துவமின்மையினால் முதலாளித்துவம் உடைந்து வருகிறது: முன்னாள் ஆர்பிஐ கவர்னர் எச்சரிக்கை

பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கமைப்புகள் பெரும்பான்மையான மக்கள் தொகுதிக்கு எதையும் வழங்குவதில்லை, இதனால் புரட்சி அச்சுறுத்தல் சமகால முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

“முதலாளித்துவம் பெரிய அச்சுறுத்தலில் உள்ளது. அது பெரும்பான்மையோரின் பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்கவில்லை, புறக்கணிக்கிறது. இதனால் முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சி ஏற்படும்.  சம வாய்ப்புகளை வழங்குவதில்லை, இதனால் வீழும் மனிதர்கள் இன்னும் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

உற்பத்தி வழிமுறைகளை சமூகவயமாக்கும்போது, சமச்சீர் தன்மை தேவை, இதில் தேர்ந்தெடுப்பு கூடாது. வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. முன்பெல்லாம் ஒரு சாதாரண படிப்பின் மூலம் ஒரு நடுத்தர வேலை வாய்ப்பு இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் வெற்றி பெற வேண்டுமெனில் நல்ல கல்வி தேவைப்படுகிறது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகே அனைத்தும் மாறிவிட்டது. பள்ளிகள் சீரழிந்து வருகின்றன, குற்றங்கள் அதிகரிக்கின்றன, சமூக நோய்க்கூறுகள் அதிகரிப்பதால் உலகப்பொருளாதாரத்துக்கு சமூகங்கள் தங்கள் உறுப்பினர்களைத் தயார்ப்படுத்த முடியவில்லை.” என்கிறார் ரகுராம் ராஜன்.

2008லிருந்தே அரசுக்கடன் 77% அதிகரித்துள்ளது, கார்ப்பரேட் கடன் 51% அதிகரித்துள்ளது. அடுத்த பொருளாதார வீழ்ச்சி 2008-ஐ விட மோசமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் சரக்கு வர்த்தகத்தில் தடைகள் ஏற்படுத்துவது பற்றி ரகுராம் ராஜன் கூறும்போது, “தடைகளை நாம் ஏற்படுத்தினால் நம் பொருட்களுக்கு அவர்களும் தடை போடுவார்கள், எப்படி நீங்கள் எல்லைகளைக் கடந்து உங்கள் பொருட்களை வர்த்தகம் செய்ய முடியும்?” என்கிறார் ரகுராம் ராஜன்.

Share:

Author: theneeweb