ஐ.நா பிரேரணை நாட்டுக்கு எதிரானது அல்ல

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் யோசனை நாட்டுக்கு எதிரானது அல்ல என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் நாட்டுக்கு எதிரான யோசனையாக இதனை எடுத்துக் காட்ட சிலர் முயன்று வருகிறார்கள்.

இந்த யோசனைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயின் நாடு பின்நோக்கித் தள்ளப்படும் என்று அமைச்சர் கிரியெல்ல கூறினார்.

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் நாம் பொருளாதார தடைக்கு உள்ளாகி இருந்தோம். 10 வருடங்கள் ஆகியும் இலங்கைக்கு எதிராக பிரேரனை நிறைவேற்றப்பட்டது. அங்கு இவ்வாறான நிலை ஏன் ஏற்பட்டது என்று புரிந்துக்கொள்ளவேண்டும்.

நாம் இவற்றுக்கு மேலாக செயற்பட்டால் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டி வரும். எமது பொறுப்பு என்ன என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். ஜனாதிபதியை நாமே வெற்றிப்பெற செய்தோம்.

அவர் அதிகாரங்கள் பலவற்றை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். உயர் நீதி மன்றம் அவ்வாறு செய்யமுடியாது என்றது நாம் எதனையும் செய்யவில்லை. எல்லையை கடந்து செயற்பட்டால் தலையீடுகள் இடம்பெறும்.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளின் பேரவை முக்கியஸ்தர்கள் தெரிவித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனைத்து இனத்தவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் யாப்பை முன்னெடுத்தால் பாரிய இறுக்கமான பிரேரனையில் தளர்வை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மாகாண சபையை வலுப்படுத்துவதற்கு அனைவரும் விருப்பம் கொண்டுள்ளனர் இந்த பிரேரனைணை மாற்ற வேண்டாம் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிகாட்டினார்.

Share:

Author: theneeweb