யாழ் மாநகர மக்களுக்கான விசேட அறிவித்தல்

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட வர்த்தக விடுதிகள், தங்குமிடங்கள், பிரத்தியேக தங்குமிட வீடுகள், தனியார் கல்வி நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவற்றை இதுவரை பதிவு செய்யாதவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்துக் கொள்ளவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த அறிவித்தல் முழுமையாக பின்பற்றப்படாமை கண்டறியப்பட்டுள்ளமையினால் மீண்டும் இந்த அறிவித்தலை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

31 ஆம் திகதி பின்னர் பதிவுச் செய்யப்படாத நிலையங்கள் இருக்குமானால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb