பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணம் செல்லும் பேருந்துக்கள் முற்றுகை

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை மற்றும் பல்வேறு வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பேருந்துக்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

பேருந்துக்கள் மாத்திரம் அன்றி இவ்வாறான ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியிலான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகனங்களில் இவ்வாறான பாகங்களை பொறுத்துவது தொடர்பில் வாகன உரிமையாளர்களை போன்று சாரதிகளுக்கும் பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணமும் பல்வேறு வர்ணங்களை கொண்ட மின்குமிழ்களை ஒளிர விட்ட வண்ணம் செல்லும் பேருந்துக்களை பரிசோதனை செய்யும் இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் பிரதேச மட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share:

Author: theneeweb