இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது

இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது

தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்தை கடத்தி வந்த குறித்த இரண்டு இலங்கைப் பெண்களும் பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.

அவர்களிடமிருந்து சுமார் 900 கிராமுக்கும் அதிக நிறையுடைய தங்க பிஸ்கட்கள், தங்க மாலைகள் மற்றும் வளையல்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சமார் 30 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இலங்கைப் பெண்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Author: theneeweb