ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 900 முறைப்பாடுகள்

தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை முறைப்பாடுகள் பொறுப்பேற்கப்படும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

இதுவரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இதுவரை 900 முறைப்பாடுகள் அந்த ஆணைக்குழுவுக்கு கிடைக்க பெற்றுள்ளன.

கொஸ்கம, சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புக்களுக்கான நட்டஈடு வழங்கும் போது மதிப்பீட்டு அதிகாரிகள் தவறான மதீப்பீடுகளை வழங்கியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஒப்பமிடும் போது சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb