மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது ஒரு வளாகத்தையோ உருவாக்க வேண்டும்

மலையகத்தில் பட்டதாரிகள் உருவாகாததன் காரணமாகவே அங்குள்ளவர்கள் அரச சேவையில் இணைய முடியாத நிலைமை உள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2019ஆம் ஆண்டுக்கான் பாதீட்டின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது ஒரு வளாகத்தையோ உருவாக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை’வன்னி பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் பிரத்தியேக பல்கலைக்கழகமாக அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நன்றி தெரிவித்தார்.

இதேநேரம், வவுனியா வளாகத்தின் சில அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஒதுக்கிடப்பட்ட நிதி தற்போதுவரை கிடைக்கவில்லை என்பதையும் அவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

Share:

Author: theneeweb