இறக்குமதி பால் மாவின் புதிய விலை விபரங்கள் இதோ!

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இறக்குமதி பால் மாவின் விலையில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட பால் மா விலை விபரங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த சபை இதனை குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் வௌியிட்ட அதிகபட்ச சில்லரை விலையின் படி , 400 கிராம் பால் மா பெக்கட் ஒன்றின் விலை 370 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் பால் மா பெக்கட்டின் விலை 920 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் , 18 கிராம் பால் மா 20 ரூபாவுக்கும் , 60 கிராம் பால் மா 60 ரூபாவுக்கும் , 70 கிராம் பால் மா 65 ரூபாவுக்கும் , 150 கிராம் பால் மா 140 ரூபாவுக்கும் மற்றும் 250 கிராம் பெக்கட் 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

900 கிராம் பால் மா பெக்கட் ஒன்றின் அதிக பட்சி சில்லரை விலை 820 ரூபா என நுகர்வோர் அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb