பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கு மீள் விசாரணை!

லண்டன் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக் எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

லண்டன் நீதிமன்ற ஊழியர்கள் இவ்வழக்கை முன்னிலைப்படுத்துவதில் ‘ தவறு இழைத்துள்ளதாக காணப்பட்டதன் அடிப்படையிலேயே பிரதமர் மெஜிஸ்ட்ரேட் எம்மா ஆர்புத்நொட் மீள் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கை தமிழர்கள் சுதந்திர தினத்தன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ‘ கழுத்து அறுப்பேன் ‘ என சைகை மூலம் அச்சுறுத்திய விவகாரத்தில் ஜனவரி மாதம் குற்றவாளியாக லண்டன் நீதிமன்றத்தால் இனங்காணப்பட்டார்.

பிரித்தானிய பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் துன்புறுத்தல் எனும் அடிப்படையிலேயே இலங்கை இராணுவ வீரர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியாக இனங்காணப்பட்டு லண்டன் நீதிமன்றத்தால் தீர்பளிக்கப்பட்டது.

இத்தீர்ப்பையே கேள்விக்குறியாக்கி தற்போது மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை இவ்வழக்கு மீள் விசாரணைக்கு வரும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb