புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

 

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் பகுதி ஒன்றில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (17) பகல் 1.30 மணியளவில் வவுனியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32, 35, 48, 49 மற்றும் 54 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குருணாகல், அதுருகிரிய மற்றும் ஹொரண ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb