30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, புதுக்கடை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த ஸ்பைஸி ஜெட் விமான சேவைக்கு சொந்தமான SG 001 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்கள் 40 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb