இந்தியாவின் அறிவுறுத்தல் படியே ஜெனீவாவில் புதிய பிரேரணை முன்வைக்கப்பட்டதாக தகவல்

மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை, இந்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை தயாரிப்பு குறித்த விபரங்கள் இந்திய அரசாங்கத்துக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு, அதன் அறிவுறுத்தல்களும் பெறப்பட்டு வந்திருப்பதாக, இந்திய அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பின் அடிப்படையிலேயே குறித்த பிரேரணை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb