நெதர்லாந்து டிராம் துப்பாக்கிச்சூடு குற்றவாளி கைது

நெதர்லாந்தில் டிராமில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உட்ரிச் போலீஸார் தெரிவிக்கையில்,

நெதர்லாந்தின் உட்ரிச் பகுதியில் அமைந்துள்ள 24 ஆக்டோபெர்ஃப்லின் பகுதியில் டிராம் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடம் முழுவதும் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அப்பகுதியின் அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இது திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக முழுவீச்சில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக துருக்கியைச் சேர்ந்த கோக்மென் டானிஸ் என்பவரை நெதர்லாந்து போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து உட்ரிச் நகரில் பயங்கரவாத தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையை 4-ஆம் கட்டத்தில் இருந்து 5-ஆம் கட்டத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோன்று பயங்கரவாத தாக்குதலுக்கான மோசமான பகுதியாகவும் அறிவிக்கப்ப்டடுள்ளது.

Share:

Author: theneeweb