நியூஸி. தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ பார்க்கிறது: டொனால்டு டிரம்ப்

நியூஸிலாந்து தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் ‘ஓவர்டைம்’ வேலை பார்ப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

நியூஸிலாந்து தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்டுவதற்காக அமெரிக்க ஊடகங்கள் இரவு, பகலாக ஓவர்டைம் வேலை பார்க்கிறது. இது என்னை ஈடுபடுத்த ஊடகங்கள் பெரும்பாடு படுகிறது. இதுபோன்ற போலிச் செய்திகள் கோலிக்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை வெள்ளை இனவெறியர் என்றும், பயங்கரவாதத்தின் வாக்குறுதியாக செயல்படுவதாக கடுமையாகச்சாடுகிறது.

இதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை தலைவர் மைக் முல்வானே மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை இனவெறியர் இல்லை, இதை பலமுறை கூறிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb