ஒரே நாளில் மோகன்லால், மம்முட்டி பட டிரைலர், டீஸர் வெளியீடு

மலையாள திரையுலகில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன மோகன்லால் நடித்துள்ள லூசிபர் படமும், மம்முட்டி நடித்துள்ள மதுர ராஜா படமும். இந்த நிலையில் மதுர ராஜா படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கும், லூசிபர் படத்தின் டிரைலர் நாளை இரவு 9 மணிக்கும் அடுத்தடுத்து வெளியிடப்படுகின்றன.

போட்டியாளர்களாக கருதப்படும் இரண்டு முன்னணி நடிகர்களின் பட டீசர் மற்றும் டிரைலர் ஒரே நாளில் வெளியாவது ஒரு விறுவிறுப்பான ரசிகர்களிடையேயும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மோகன்லாலின் லூசிபர் படத்தை நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ளார்.. இந்தபடம் வரும் மார்ச்-28ஆம் தேதி வெளியாகிறது.

மம்முட்டி நடித்துள்ள மதுர ராஜா படத்தை புலி முருகன் புகழ் இயக்குனர் வைசாக் இயக்கியுள்ளார். இது இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வரும் ஏப்-12ஆம் தேதி ரிலீஸாகிறது..

Share:

Author: theneeweb