சொறிக்கல்முனை வைத்திய நிலையம் பைசல் காசிமால் திறந்து வாய்ப்பு

சுகாதார போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் 35 மில்லியன் செலவில் சொறிக்கல்முனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல வசதிகளையும்கொண்ட நவீன ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களின் பாவனைக்காக இம்மாதம் 18ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ரீ.சுதர்சன்,சொறிக்கல்முனை வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் செனரத், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத் தந்தை ஐ.இக்னேசியஸ்,மட்டக்களப்பு சகாயபுரம் பங்கு தந்தை ஆர்.திருத்ச்செல்வம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
மிகவும் பழமை வாய்ந்த இவ்வைத்தியசாலை கடந்த கால யுத்தம் காரணமாக எதுவித அபிவிருத்தியும் செய்யப்படாதிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே அபிவிருத்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
இதன்போது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசால் காசீமின் சேவையை பாராட்டி சொறிக்கல்முனை மக்கள் சார்பாக பங்கு தந்தையினால் அவர் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
[ஊடகப் பிரிவு]
Share:

Author: theneeweb