குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 1321 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றம் தொடர்பில் 1321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 27,954 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Author: theneeweb