சிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள்

சிறிலங்கா சுதந்திர கட்சி, 2019ம் ஆண்டின் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை.

இதுதொடர்பில் தங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, இறுதி வாக்கெடுப்பில் அவர்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களிப்பர் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதீட்டின் ஊடாக மக்களுக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது.

எனவே அதனை நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், நாட்டில் தேர்தல் இல்லாத தேர்தல் ஆணையாளரே உள்ளார்.

தேர்தல் வேண்டும் என்று பொதுவெளியில் அவர் அறிவிப்பதைப் போன்றே,நீதிமன்றத்திலும் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb