ஜப்பானில் திருடப்பட்ட ஜீப் வண்டி பாகங்களாக பிரித்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுளது.

பாகங்களாக பிரித்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு மீள பொருத்தப்பட்டுள்ள ஜீப் வண்டியுடன் நபரொருவர் களனி – வேல்துவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை பாணந்துiறை – வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதோடு, அந்த ஜீப் வண்டி மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதனுடன் இந்த ஜீப் வண்டி ஜப்பானில் திருடப்பட்டு, பின்னர் பாகங்காளாக பிரிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜீப் வண்டியின் சந்தை பெறுமதி நான்கு கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான சந்தேக நபர் கிரிபத்கொட தெம்பிலிகஸ்முல்ல பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share:

Author: theneeweb