கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடுகளால் நிலத்தில் இருந்து பரீட்சை எமுதிய மாணவர்கள்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவிகளினால் மாணவர்கள் பரிட்சை எழுதமுடியாமல் பதட்டத்துடன் நிலத்தில் இருந்து மாணவர்கள் பரீட்சை எழுதியுள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு, ஏழு மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பில் இரண்டு பெரிய குளவிகள் கூடு காரணமாக  பரீட்சை எழுத முடியாத நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இதனால் பரீட்சைக்காக தயார் செய்யப்பட்ட வகுப்பறைகளை விட்டு வெளியேறி நிலத்தில் இருந்து பரீட்சை எழுதிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் குளவி மற்றும் குரங்குகளின் தொல்லைகள்  மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இது  தொடர்பில் பாடசாலை சமூகம்  பல தரப்பினர்களிடம் எடுத்துக் கூறிய போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும். இதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள்  பாதிக்கப்படுவதோடு, பாடசாலையின் சொத்துக்களும் சேதம் ஏற்பட்டு வருகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share:

Author: theneeweb