இலண்டன் மாநகரில் இலக்கிய மாலை நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு..!

இலண்டன் மாநகரில் எதிர்வரும் 31-ம் திகதி (31 – 03 – 2019) ஞாயிறு பிற்பகல் 3;.30 மணியளவில் நடைபெறவுள்ள ‘இலக்கிய மாலையில்” நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலண்டன் – ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலை இலக்கியப் படைப்பாளிகள் பலர் உரைநிகழ்த்தவுள்ளனர்.

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ‘இலக்கிய வித்தகர் – கலாபூசணம்” வி. ரி. இளங்கோவனின் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்”, ‘என் வழி தனி வழி அல்ல…” ‘ஒளிக்கீற்று” ஆகிய நூல்களும், ‘பாரதி நேசன்” வீ. சின்னத்தம்பியின் ‘ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்” என்ற நூலும் இந்த அறிமுக நிகழ்வில் இடம்பெறுகின்றன.
இந்நூல்களின் அறிமுக நிகழ்வுகள் அண்மையில் தமிழகம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆதியாமிடங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share:

Author: theneeweb