மன்னார் மனித புதைக்குழி அகழ்வு பணிகளை தொடர்வதா? இல்லையா? இறுதி தீர்மானம் நாளை

மன்னார் மனித புதைக்குழியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதா? அல்லது முற்றாக நிறுத்துவதா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல் மன்னார் நீதவான் டீ.சரவணராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மன்னார் மனித புதைக்குழியில் அகழ்வு பணிகளை மேற்கொண்ட விஷேட மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதுதவிர, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பணியாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றுள் 330 மனித எச்சங்கள் மன்னார் நீதிமன்றத்தின் விஷேட காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Share:

Author: theneeweb