மன்னாரிலுள்ள பாரிய மனிதப் புதைகுழி: நாம் மேலும் ஆய்வுகள் செய்ய வேண்டியது அவசியமா?

சந்திரே தர்மவர்தன ….

2013ன் பிற்பகுதியில் மன்னாரில் சதொச களஞ்சியத்தின் இடத்தில் கட்டுமானப் பணிக்காக வேலையாட்கள் நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகளின் எச்சங்கள் காணப்பட்டன, அவர்கள் தற்செயலாக நாட்டின் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.

ரேடியோ – காபன் கால அளவீடு பரிசோதனை மூலமாக அதன் காலத்தை கணக்கிட்டபோது அந்த எலும்புக்கூடுகளின் எச்சங்கள் 15 – 18வது நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில அரசுசார தொண்டு நிறுவனங்கள் ஆகியவை மேலும் ரேடியோ – காபன் காலக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறு இது இத்தகைய அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை விளங்கிக் கொள்வது முக்கியமானது மற்றும் மேலதிக ஆய்வுகளுக்கு விஞ்ஞ}ன ரீதியாக எங்கு உத்தரவாதம் வழங்கப்படும்.

ழம் சார்பான தமிழ் நெற் 24 டிசம்பர் 2013 செவ்வாய் அன்று இந்தச் செய்தியைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா இராணுவத்தை பின்வருமாறு குற்றஞ்சாட்டியிருந்தது:

“வட மாகாண சபையின் மீன்பிடி அமைச்சரான திரு.டெனீஸ்வரன் … இந்த எலும்புகள் சித்திரவதையின் அடையாளச்சின்னங்கள்…. ஸ்ரீலங்கா இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்திருந்த இரண்டாவது பெரிய இராணுவ முகாம் இந்த பிரதேசத்தில் 1993 முதல் நிறுவப்பட்டிருந்தது என்று சொல்லியிருந்தார்”.

கண்டெடுக்கப்பட்ட 330 எலும்புக்கூடுகளில் 30 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது. மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ இனை முறியடிக்க காரணமாகவிருந்த ஈழப்போர் நான்கின் கடைசி மாதங்களின்போது ஸ்ரீலங்கா இராணுவம் 40,000 தமிழர்களைக் கொன்றதாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை குற்றம் சாட்டியிருந்தது. தருஸ்மான அறிக்கை 40,000 பேர் கொல்லப்பட்டதாக நம்பகமான அறிக்கைகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டியது மற்றும் அந்த நம்பகமான அறிக்கைகளை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்தது. ஆரம்பத்திலிருந்தே அந்த அறிக்கை போட்டிக்குரிய ஒன்றாக இருந்தது, முதலாவதாக செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்தஅமெரிக்க பௌதீக சங்கம் இறந்தவர்களின் எண்ணிக்கையை புறக்கணித்தது அத்துடன் கூட்டாகக் காயமடைந்ததுக்கான முறையான ஆதாரங்கள் இல்லததால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூன்று நான்கு மடங்காக உயர்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டைச் சமீபத்தில் பிரித்தானிய அரசின் ராஜதந்திர தகவல்கள் மற்றும் பரணகம ஆணைக்குழுவின் வாதங்களையும் அடிப்படையாகப் பயன்படுத்தி நெஸ்பே பிரபு சவாலுக்கு உட்படுத்தியிருந்தார்.

க்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு குறைந்தபட்சம் சில ஆதாரங்களை இந்த மனித உரிமைப் புதைகுழி வழங்கும் என்று கருதப்பட்டது. மன்னார் புதைகுழி அகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடும் ஒவ்வொரு சமயத்திலும் “எலும்புகள் சித்திரவதைக்காக அடையாளத்தைக் கொண்டிருந்தன” என்கிற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்காக வாதிடும் வழக்கறிஞர்கள் இந்த விசாரணைகளைப் பற்றி அதிருப்தி வெளியிட்டார்கள், மற்றும் 11 பெப்ரவரி 2014ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் புதைகுழி பற்றி ஒரு சர்வதேச விசாரணையைக் கோரியது, தருஸ்மான் அறிக்கையில் சாட்டப்பட்டுள்ள யுத்தக் குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என அது கோரிக்கை விடுத்தது. பிரபல ஊடகவியலாளர் ஷர்மிந்த பெர்ணாண்டோ த ஐலன்ட் பத்திரிகையின் செய்தியில் தெரிவித்திருப்பது “ உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் ஒருபகுதி மன்னார் சதொச மனிதப் புதைகுழியை அடிப்படையாகக் கொண்டு ஒரு உயர்மட்டப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன….. ஜேர்மன் தூதுவர் ஜோரின் றோகெட், அந்தக் களத்துக்கு நவம்பர் 27, 2018ல் விஜயம் செய்தார் …. அவரைத் தொடர்ந்து பிரித்தானியத் தூதுக்குழுவும் டிசம்பர் 11, 2018ல் அங்கு விஜயம் மேற்கொண்டது. டிசம்பர் 7, 2019ல் இரண்டு துண்டு மனித எலும்புகள் ஒரு கேபிள் கம்பியினால் இணைத்து கட்டப்பட்டிருந்தவாறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே பிரித்தானிய தூதுக்குழுவின் விஜயம் இடம்பெற்றது. இந்தக் கண்டுபிடிப்பு மக்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதின் பின்னர் புதைக்கப் பட்டிருக்கலாம் என்கிற ஊகத்தைக் கிளப்பியது. மன்னார் புதைகுழி களத்தின்மீது காணபிக்கப்பட்ட ஆர்வம் காரணமாக ஜெனிவாத் தீர்மானம் ஒக்ரோபர் 2015ல் ஸ்ரீலங்காவால் இணை அனுசரணை வழங்குவதற்கு அழுத்தம் கொடுகப்பட்டதுடன் இராணுவத்தின் மீதான பிரச்சாரத்தையும் பலப்படுத்தியது. கத்தோலிக்க குருமார்களில் ஒரு பகுதியினர்கூட மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக இராணுவத்தின்மீது குற்றம் சுமத்தும் திட்டத்துக்கு உதவி புரிந்தனர்”.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இமானுவல் பெர்ணாண்டோ… தெரிவித்தது (28 டிசம்பர் 2018) “மன்னார் நகரில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து கட்டாயமாக காணாமலாக்கப்பட்டோர்களின் விதியைப் பற்றி நம்மால் உணரக்கூடியதாக உள்ளது” என்று.

நீதி விசாரணைக்குத் தலைமைதாங்கிய ஸ்ரீலங்கா நீதவான் ரி. சரவணராஜா உறுதியான சான்றுகளைப் பெறுவதற்கு விரும்பினார். புகழ்பெற்ற தொல்லியல் நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியருமான கலாநிதி சோமதேவா மற்றும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் ராஜபக்ஸ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அகழ்வாய்வு நடத்தப்பட்டது. அவர்கள் நவீன ரேடியோ காபன் தொழில்நுட்பத்தின் மூலம் எலும்புகளைப் பயன்படுத்தி அவற்றின் காலகட்டத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் முடிவு செய்தார்கள். காணாமற் போனோர் அலுவலகம் எலும்புகளின் ரேடியோ காபன் பரிசோதனைக்கு நிதி வழங்கியது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு பரிசோதனைக்கூடம் அந்த எலும்புகள் கி.பி 1499 மற்றும் 1720 க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடித்துள்ளது.

ஒரு படுகொலை 15 – 18ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது

தரப்பட்டுள்ள அந்த காலகட்டம் போர்த்துகேயரின் வருகையை ஒட்டியது, ஒரு தெளிவான கருதுகோளின்படி ஒரு பெரிய உள்நாட்டு மோதல் அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கலாநிதி அஜித் அமரசிங்க சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் மன்னாரின் பாரிய மனிதப் புதைகுழியைப் பற்றி ‘மன்னார் பாரிய கல்லறை மற்றும் 1543ம் ஆண்டின் தியாகிகள்’ என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் மன்னாரில் வைத்து 600 கிறீஸ்தவ தமிழர்கள், யாழ்ப்பாண அரசன் என்று இரத்தம் தோய்ந்த அரண்மனையில் வைத்து தன்னை அறிவித்துக்கொண்ட முதலாம் சங்கிலியானால் படுகொலை செய்யப்பட்டதுக்கான ஒரு வரலாற்றுக் கணக்கைத் தெரிவிக்கிறது. அவர் பரிந்துரைப்பது அந்த பாரிய மனிதப் புதைகுழி படுகொலை செய்யப்பட்ட அந்தக் கத்தோலிக்கர்களுடையதாக இருக்கலாம் ஏனென்றால் அவர்களுக்கு ஒரு முறையான கிறீஸ்தவ நல்லடக்கம் இடம்பெறவில்லை. உண்மையில் இது ஒரு வலுவான கருதுகோள் அதைப்பற்றி மேலும் ஆராயவேண்டும்.

Black Death

வலுக்குறைவானதாக இருப்பினும் மற்றுமொரு கருதுகோள் தெரிவிப்பது, 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவைச் சேதப்படுத்தியதுடன் பிறநாடுகளுக்கும் பிரவிய பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடையதாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. அது 1665ல் உலகை உலுக்கிய பயங்கர பிளேக் நோய், அது ஐசாக் நியுட்டனை அவரது கிராமப்புற வீட்டிற்கு திரும்ப வைத்ததுடன் ஒரு அப்பிள் மரத்தின் கீழிருந்து புவியீர்ப்பை பற்றி யோசிக்க வைத்தது. கறுப்பு மரணம் என்று அழைக்கப்பட்ட அந்த பிளேக் நோயினால் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா போன்ற இடங்களில் உள்ள நகரங்கள் சிலவற்றில் 50 விகிதமான மக்கள் கொல்லப்பட்டார்கள், அந்த நகரங்கள் தங்களின் இறந்தவர்களின் உடல்களை பிளேக் கிடங்குகளில் புதைப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டன. யெர்சினியா பஸ்டிஸ் எனப்படும் பிளேக் பக்டீரியாக்கள் எலிகள் போன்றவற்றிலுள்ள உண்ணிகள் மற்றும் வேறு காவிகள் மூலம் கிழக்குப் பகுதி முழுவதிலும் நோய்த் தொற்றைப் பரப்பியது. மேலும் இந்தக் காலத்தில்தான் ஐரோப்பியக் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு வருகை தந்த காலம், அவை காலனித்துவ ஆட்சியை மட்டும் கொண்டுவரவில்லை புதிய நுண்ணுயிர்கள் மற்றும் பிளேக் மற்றும் அம்மை போன்ற தொற்று நோய்களையும் கொண்டு வந்தன. உண்மையில் புராதன டிஎன்ஏ யின் ஆய்வின் அடிப்படையிலும் வரலாற்றுப் பதிவுகள் மூலமும் பிளேக் பக்டீரியாக்கள் சகாராப் பாலைவனத்தையும் கடந்து சென்றுள்ளதாக புதிய சான்றுகள் கிடைத்துள்ளன. 13ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டுவரை எத்தியோப்பிய நூல்களில் குறிப்பிட்டுள்ள இனந்தெரியாத தொற்றுநோய்கள் இறந்தவர்களை அடக்கம்செய்வதற்குக்கூட யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் கொன்றது என்பது உட்பட பல சான்றுகளை வரலாற்றாசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். பரிசிலுள்ள விஞ்ஞ}ன ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மாரி லூறே டிராட் கண்டுபிடித்திருப்பது 15ம் நூற்றாண்டு எத்தியோப்பியர்கள் பிளேக் நோயுடன் தொடர்புடைய இரண்டு புனிதர்களான புனித றோச் மற்றும் புனித செபஸ்தியன் ஆகியோரை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று.

இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது இந்தியாவின் கேரளா, போர்த்துக்கேய கத்தோலிக்கம் அதேபோல சிரிய மரபுவழி கிறீஸ்தவம் அகியவற்றை பின்பற்றும் ஒரு மாநிலம் இது புனித செபஸ்தியாரைப் பூஜிப்பதில் பிரபலமானது. இன்றுகூட பக்தியான பல சமூகங்கள் பிளேக், தொற்றுநோய் மற்றும் ஏனைய நோய்கள் மோட்சத்தில் இருந்து அனுப்பப்பட்ட தண்டனை என விசுவசிப்பதுடன் அத்தகைய உபத்திரங்களிலிருந்து தப்புவதற்கு புனித றோச் மற்றும் புனித செபஸ்தியார் ஆகியோருக்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றைய தினத்தில் மன்னாரிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் தேவாலயம் 17ம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்ததா என்பதை ஆராயும் பொறுப்பு வரலாற்றாசிரியர்களைச் சேர்ந்தது(நான் வெறுமனே என்னிடத்தில் இருந்து இதைப்பற்றி ஊகிக்கிறேன் பெயர்கள் மற்றும் ஆய்வுகள் டிஎச் – வெப்.ஓஆர்ஜி என்கிற இணையத்தளத்தில் மன்னார் என்பதின் கீழ் பெயர் இடம் என்பனவற்றைக் காணலாம்). சுவராஸ்யமாக புனித செபஸ்தியாருக்கு அல்லது புனித றோச்சுககு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீலங்காவிலுள்ள ஏனைய தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் உள்ள பிரதேசங்கள் தம்பதெனியா அரசர்களுடையது, போர்த்துக்கேயர் போராடி அவற்றைப் பெற்றார்கள் அங்குதான் பிளேக் நோய் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதில் முக்கிய இடத்தை வகிக்கலாம். சில வரலாற்றாசிரியர்கள் இடைக்கால ஸ்ரீலங்காவில் பிளேக் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும்.

மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்வதின் உந்துதல்கள் என்ன?

இவை அனைத்தும் மேற்கத்திய அரசாங்கங்களால் ஆதரிக்கப்படும் சந்தேகத்துக்குரிய சக்திவாய்ந்த சிறுபான்மையினரின் அரசியல் கோரிக்கைகள், மேலும் இந்த மனிதப் புதைகுழிகள் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு நிதி கிடைக்கக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. (தவறாக வழிநடத்தப்பட்டாலோ இல்லாவிட்டாலோ) அது அரசியல் நோக்கம் கொண்டது, றேடியோ காபன் பரிசோதனைக்கான நிதியும் அந்த நோக்கத்திற்காகவே வழங்கப்பட்டது. மேலதிக ஆய்வுகள் பின்வருவனவற்றை தேடுவதற்காக செய்யப்பட வேண்டும்:
(1) கிறீஸ்தவர்களின் படுகொலைகள் சங்கிலியன் கீழ் நடந்தது என்பதை உறுதிப்படுத்துவதற்கான குருசுகளைப் போல பக்தியுடன் தொடர்புடைய சான்றுகளைத் தேடுவதற்கான ஒரு ஆய்வு
(2) பிளேக் அல்லது அது போன்ற வேறு நோய்கள் மூலம் இந்தகைய தொகையான அளவு சடலங்கள் புதைக்கப்பட்டதுக்கான சான்றுகளை பக்டீரியா சுயவிபரங்கள் மற்றும் எலும்புகளின் எச்சங்களில் காணப்படும் இறந்த புழுபூச்சிகளில் தேடுவதன் மூலம் கண்டறிதல்.
(3) எலும்புகளின் எச்சங்களில் காணப்படும் புராதன டி.என்.ஏ பற்றிய ஒரு ஆய்வு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
டிஎன்ஏயின் பின்னாலுள்ள அறிவியல் சமீப காலத்துக்குரியது.முழுமையான முதல் வரிசைப்படுத்தப்பட்ட பண்டைய மனித மரபணு 4 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கிரீன்லாந்தில் வாழ்ந்த ஒரு மனிதனுடையது (2010ல் பிரசுரிக்கப்பட்டது). ஒரு மண்டையோட்டின் சிறிய பகுதியில் இருந்து முக்கிய முன்னேற்றமான கண்டுபிடிப்பு பெறப்பட்டது, அதாவது உட்காதைச் சுற்றியிருக்கும் எலும்புக் கவசம் பெற்றோஸ் என அழைக்கப்படும் இது புராதன டி.என்.ஏ வளங்கள் அதிகம் நிறைந்தவை, வெப்பமண்டலங்களில் பெறப்படும் பாதுகாக்கப்படாத மோசமான எலும்புக்கூடுகளிலும் கூட இது வளம் நிறைந்ததாக இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பு உலகம் முழுவதிலும் புராதன டி.என்.ஏ பற்றிய ஆய்வுகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. மன்னாரில் கண்டுபிடிக்கப் பட்ட எலும்புக்கூடுகள் சில நூற்றாண்டுகள் மட்டும் பழமையானவை, இந்த எலும்புகளில் இருந்து பொருத்தமான டி.என்.ஏ யினைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதற்கு மேலதிகமாக மில்லியன் வருடங்கள் பழமையான மாதிரிகள், 14ம் நூற்றாண்டு மக்களில் இருந்து பெறப்பட்ட ஆய்வுகள் (உதாரணம்: நொறிஸ் பாம் ஆய்வுகள்) இருப்தாக மூலக்கூற்று மானிடவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் ரேடியோ – காபன் கால அளவீடு தொல்லியலில் புரட்சி செய்தததைப்போல புராதன டி.என்.ஏ ஆய்வு 21ம் நூற்றண்டில் புரட்சியை எற்படுத்தும்.

மன்னார் புதைகுழியில் இருந்து கண்டுபிடிக்கப்படும் ஒரு புராதன டி.என்.ஏ இனை ஆய்வு செய்வதின் மூலம் இந்த மன்னார் புதைகுழி மர்மத்தின்மீது மேலும் வெளிச்சம் பாய்ச்சப்படும். இதேபோல இன்னும் அதிக புதைகுழிகள் ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, நோய்களினால் மட்டுமன்றி ஆனால் ஜேவிபி மற்றும் எல்ரீரீஈ போன்றவற்றின் இரத்தம் தோய்ந்த சமீபத்தைய மோதல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு என்பனவற்றுடன் தொடர்புடைய பல புதைகுழிகள் ஸ்ரீலங்கா எங்கும் சிதறிக்கிடக்கின்றன. நிராயுதபாணிகளான பொலிசாரை எல்.ரீ.ரீ.ஈ யிடம் சரணடையும்படி அன்ரன் பாலசிங்கம் ஜனாதிபதி பிரேமதாஸவை ஏமாற்றிய சமயத்தில் சுமார் 600 பொலிசார் எல்.ரீ.ரீ.ஈ இனால் கொல்லப்பட்டார்கள். இதேபோல ஈழப்போர் நடைபெற்ற சமயத்தில் பல இடங்களில் ஒன்று அல்லது மற்றைய இனத்தை இலக்குவைத்து இதேபோன்ற பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 

 

Share:

Author: theneeweb