இலங்கையில் செயற்கை மழை திட்டம் வெற்றி

இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகப்டர் மூலம் மேக மூட்டங்கள் மீது இரசாயணப் பதார்த்தம் தூவப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் தூவப்பட்டுள்ளதையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக இரசாயணப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb