நாமல் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல அனுமதி

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (22) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதேவேளை மேல் நீதிமன்றத்தால் குறித்த சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தால் இந்த உத்தரவு அதற்கு தடையாகாது என்றும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தமது எதிர்ப்பு இல்லை என்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb