பொது மக்களுக்கு அறிவிக்காது மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

பொது மக்களுக்கு அறிவிக்காது மின்விநியோகம் துண்டிக்கப்படுவதாக, பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மின்சார விநியோகம் துண்டிப்பது குறித்து, இலங்கை மின்சார சபையிடம் அறிக்கை ஒன்றை கோரவும் தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் பொது மக்களுக்கு அறிவிக்காது மேற்கொள்ளப்படும் விநியோக துண்டிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தி அதுதொடர்பில் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணைக்கட்டுக்களை அண்மித்த பகுதிகளில் போதைய மழை வீழ்ச்சி இன்மை காரணமாகவே, மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக, மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனிவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் பொது மக்களுக்கான மின்சார விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Author: theneeweb