கிளிநொச்சி கண் சத்திர சிகிசைக்கு வைத்திய நிபுணர் மலரவன் உதவுவார் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திர சிகிசைக்கு  வடக்கின் பிரபல கண் சத்திர சிகிசை நிபுணர் மருத்துவர் மலரவனின் உதவியும் ஒத்துழைப்பு கிடைக்கும்  என யாழ்  போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதன் முதலாக கண் சத்திர சிகிசை  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கண் சத்திரசிகிசை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வு மகிழ்ச்சியானது. இதற்காக உழைத்த அனைவரும் நன்றிக்குகரியவர்கள்.  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கண் சத்திர சிகிசைக்கு தேவை ஏற்படுகின்ற  போது உதவிகளையும் ஒத்துழைப்புக்களை கண் சத்திரசிகிசை நிபுணர் மலரவன்  வழங்குவதற்கு தயாராக உள்ளார். ஏற்கனவே அவர் உதவிகளையும் வழங்கியிருக்கின்றார். எதிர் காலத்தில்   அவரின் உதவி நிச்சயம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்
விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் கிரிதரன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Share:

Author: theneeweb