பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையர் ஒருவர் நியூஸிலாந்தில் விளக்கமறியலில்

நியூஸிலாந்தில் இலங்கையர் ஒருவரை பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பில் குற்றவாளியாக கருதப்படும் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Share:

Author: theneeweb