பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஐவரையும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தனர்

சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஐவரும் இன்று அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb